இராசிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

ராசிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு 2 நாட்கள் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

Update: 2021-08-12 07:30 GMT

இராசிபுரம் :

ராசிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு 2 நாட்கள் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

ராசிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் 2 நாட்கள் வீடியோ கான்பரன்சிங் முறையில் நடைபெற்ற பயிற்சி முகாமிற்கு, ரோட்டரி சங்கத் தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார். செயலாளர் சுரேந்திரன் வரவேற்றார். பயிற்சியின் நோக்கம் குறித்து ரோட்டரி மாவட்ட கல்விக்குழுத் தலைவர் குப்தா விளக்கி கூறினார். மாவட்ட முதன்மை க ல்வி அலுவலர் அய்யண்ணன் முகாமை துவக்கி வைத்து உயிருள்ள வகுப்பறைகள் என்ற தலைப்பில் பேசினார். ரோட்டரி மாவட்ட கவர்னர் சுந்தரலிங்கம் பேசும் போது, ரோட்டரி லிட்டரசி திட்டத்தின்கீழ், 2021 -22-ஆம் கல்வியாண்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக கூறினார். நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலர் பாலசுப்ரமணியன், ரோட்டரி உதவி கவர்னர் குணசேகர், இயக்குனர் ராமசாமி, ஆசிரியர் பயிற்சித் திட்ட மாவட்டத் தலைவர் கருணாகர பன்னீர்செல்வம், ராசிபுரம் வட்டாரக் கல்வி அலுவலர் வெங்கடாஜலம், நாமகிரிப்பேட்டை வட்டாரக் கல்வி அலுவலர்கள் கணேசன், பிரபு குமார் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

சேலம் மாவட்ட அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் எம்.செல்வம், சென்னை லேடி வெலிங்டன் பி.எட் கல்லூரி பேராசிரியர் மணிகண்டன், சேலம் டயட் உதவி பேராசிரியர் ஜெயமணி, பேராசிரியர் கலைவாணன், ரோட்டரி சங்கச் செயலாளர் சுரேந்திரன், ஓசூர் ஹோலி ஏஞ்சல்ஸ் ஜோவட் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனர்.

Tags:    

Similar News