ராசிபுரம் அருகே வனக்குழு உறுப்பினர்களுக்கு சுழல் நிதி கடனுதவி: எம்.பி., வழங்கல்
ராசிபுரம் அருகே வனக்குழுவைச் சேர்ந்த பெண்களுக்கு சுழல் நிதி கடன் உதவி வழங்கப்பட்டது.;
ராசிபுரம் தாலுக்கா, நாமகிரிப்பேட்டை ஒன்றியம், குருவாளா கிராமத்தில், கிராம வனக்குழு பெண்களுக்கு சுழல் நிதி கடனுதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் தலைமை வகித்தார்.
ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கிராம வனக் குழுவினருக்கு கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார். மொத்தம் 69 பெண்களுக்கு தலா ரூ. 15 ஆயிரம் வீதம், ரூ. 10 லட்சத்து 35 ஆயிரம் சுழல் நிதி கடனுதவி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், ராசிபுரம் வனக்காப்பாளர் ரவிச்சந்திரன், முன்னாள் எம்.பி. சுந்தரம், முன்னாள் எம்எல்ஏ ராமசுவாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.