இராசிபுரம் அருகே ஏரிப்பகுதியில் இருந்த கோயில், கட்டிடங்கள் அகற்றப்பட்டன

ஐகோர்ட் உத்தரவின்படி இராசிபுரம் அருகே ஏரிப்பகுதி ஆக்கிரமிப்பில் இருந்த கோயில் மற்றும் கட்டிடங்கள் அகற்றப்பட்டன.

Update: 2022-04-13 02:30 GMT

இராசிபுரம் அருகே ஆலத்தூர் ஏரிப் பகுதியில், ஆக்கிரமிப்பில் இருந்த கட்டிடங்கள், பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன.

ஐகோர்ட் உத்தரவின்படி இராசிபுரம் அருகே ஏரிப்பகுதி ஆக்கிரமிப்பில் இருந்த கோயில் மற்றும் கட்டிடங்கள் அகற்றப்பட்டன. இராசிபுரம் தாலுக்கா பட்டணம் கிராமத்தில், ஆலத்தூர் ஏரி உள்ளது. பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி பகுதியை ஆக்கிரமித்து கோயில், வீடுகள் மற்றும் பால் சொசைட்டி உள்ளிட்ட கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவில், ஏரிப்பகுதியை ஆக்கிரமித்து கட்டபட்பட்டிருந்த 9 வீடுகள், 3 பால் சொசைட்டிகள் மற்றும் ஒரு விநாயகர் கோயிலை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்திரவிட்டது.

இதையொட்டி இராசிபுரம் தாசில்தார் கார்த்திகேயன், பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவு உதவி செயற்பொறியாளர் மற்றும் போலீசார் முன்னிலையில் ஆக்கிரமிப்பில் இருந்த கோயில், சொசைட்டி கட்டிடங்கள் மற்றும் வீடுகள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News