இராசிபுரம் பொன் வரதராஜ பெருமாள் கோயில் தேர்த்திருவிழா கோலாகலம்

இராசிபுரம் பொன் வரதராஜ பெருமாள் கோயில், தேர்த்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்தனர்.

Update: 2022-04-19 03:15 GMT

இராசிபுரம் பொன் வரதராஜ பெருமாள் திருக்கோயில் தேரோட்டம் நடைபெற்றது.

ராசிபுரத்தில், பிரசித்தி பெற்ற ஸ்ரீ பொன் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலின் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் ஒவ்வொரு கட்டளைதாரர் சார்பிலும் சாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

முக்கிய நிகழ்வான தேரோட்டத்தில், ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் அலங்கரிக்கப்பட்ட தேருக்கு எழுந்தருளினார். அப்போது சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேரோட்டம் துவங்கியது. நாமக்கல் எம்.பி. சின்ராஜ், ராசிபுரம் நகராட்சி தலைவர் கவிதா சங்கர் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் மாயவன், நகர தி.மு.க செயலாளர் சங்கர், ஜன கல்யான் இயக்க தலைவர் பரந்தாமன், கொ.ம.தே.க மாநில விவசாய அணி துணை செயலாளர் சந்திரசேகரன், ராசிபுரம் டிஎஸ்பி செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், கோயில் செயல் அலுவலர் சித்ரா உள்ளிட்ட திரளானவர்கள் தேர்வடம் பிடித்து தேர் இழுத்தனர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News