இராசிபுரம் பாமக பெண் வேட்பாளர் துணி அயர்ன் செய்து ஓட்டு சேகரிப்பு

இராசிபுரம் நகராட்சி 25வது வார்டு பாமக வேட்பாளர் ரேவதி, ஒரு கடையில் துணி அயர்ன் செய்து கொடுத்து வாக்கு சேகரித்தார்.;

Update: 2022-02-14 11:00 GMT

இராசிபுரம் நகராட்சியில் பாமக பெண் வேட்பாளர் துணி அயர்ன் செய்து கொடுத்து ஓட்டு சேகரித்தார்.

இராசிபுரம் நகராட்சி 19வது வார்டு பாமக வேட்பாளராக பன்னீர்செல்வம், 25வது வார்டு வேட்பாளராக ரேவதி, 26வது வார்டு வேட்பாளராக கந்தசாமி, 27வது வார்டு வேட்பாளராக முத்துப்பாண்டி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதையொட்டி 26வது வார்டு பகுதியில் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. பாமக மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து வேட்பாளர்கள் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். 25வது வார்டு பாமக வேட்பாளர் ரேவதி, அந்த வார்டில் உள்ள துணி அயர்ன் செய்யும் கடைக்குச் சென்றபோது, அவர் அயர்னிங் மெசின் மூலம் துணி அயர்ன் செய்து கொடுத்து வாக்கு சேகரித்தார். பாமக மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், மாநில இளைரணி துணை செயலாளர் பாலு உள்ளிட்ட திரளான பாமக மற்றும் வன்னியர் சங்க பிரமுகர்கள் பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News