இராசிபுரம் அரசு கலைக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
இராசிபுரம் அரசு கலைக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் 1997 முதல் 2000-ம் ஆண்டு வரை அரசியல் அறிவியல் துறை மற்றும் வரலாற்று துறையில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரியில் நடைபெற்றது. அரசியல் அறிவியல் துறை தலைவர் சிவகுமார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். முன்னாள் மாணவர் ஜெயசீலன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கல்லூரியின் முன்னாள் அரசியல் அறிவியல் துறை தலைவர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் நீதித்துறை, காவல் துறை, ஆசிரியர் பணி உள்பட பல்வேறு அரசு பணிளில் பணியாற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முன்னாள் மாணவர்கள் சங்க வளர்ச்சிக்கு நிதி உதவி அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவரும், உதவி பேராசிரியருமான செந்தில்குமார் மற்றும் குமரேசன், ரமேஷ் சந்திரன், முருகன், தங்கவேல் ஆகியோர் செய்திருந்தனர்.