இராசிபுரம் சட்டசபை தொகுதியில் 1.67 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி

ராசிபுரம் சட்டசபை தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் 1,487 பயனாளிகளுக்கு ரூ.1.67 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.;

Update: 2021-12-04 04:00 GMT

இராசிபுரம் பகுதியில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

இராசிபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட, இராசிபுரம், வெண்ணந்தூர், அத்தனூர், பிள்ளாநல்லூர், ஆர்.புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடைபெற்றன. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தின் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். பல்வேறு நிகழ்ச்சிகளில் மொத்தம் 1,487 பயனாளிகளுக்கு ரூ.1.67 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர் பேசியாதவது:

மக்கள் நலனில் அக்கறை கொண்ட தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இனிவரும் நாட்களில் பெறப்படும் மனுக்கள் மீது மேலும் விரைவாக நடவடிக்கை எடுத்து நலத்திட்ட உதவிகளும் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என கூறினார். முன்னதாக, அத்தனூர் டவுன் பஞ்சாயத்து சமுதாயக்கூடத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிதிட்டத்துறையின் சார்பில் நடைபெற்ற, சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டு, 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு 21 வகையான சீர் வரிசை பொருட்களை வழங்கினார்.

நிகழ்ச்சிகளில், டிஆர்ஓ கதிரேசன், ஆர்டிஓ மஞ்சுளா, முன்னாள் எம்.பி சுந்தரம், முன்னாள் எம்எல்ஏராமசாமி, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் துரைசாமி,வெண்ணந்தூர் அட்மா குழு தலைவர் துரைசாமி, ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News