இராசிபுரம் அருகே கோயில் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து சாலை மறியல்

இராசிபுரம் அருகே, கோயில் சிலையை உடைத்தவர்களைக் கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-09-22 02:45 GMT

இராசிபுரம் அருகே சீராப்பள்ளியில் கோயில் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டடனர்.

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்துள்ள சீராப்பள்ளி கிராமத்தில், ஒரு சமூகத்தினருக்கு சொந்தமான அய்யனார் கோயில் உள்ளது. பல ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் இக்கோயிலில் வழிபாடு நடத்தி வந்தனர். சம்பவத்தன்று அதிகாலை மர்ம நபர்கள், கோயிலில் இருந்த ஒரு சாமி சிலையை இடித்ததாக தெரிகிறது.

இதைக் கண்டித்தும், சாமி சிலையை இடித்த மர்ம நபர்களை கைது செய்யக்கோரியும், சீராப்பள்ளி பகுதியில் அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இராசிபுரம் - ஆத்தூர் மெயின் ரோட்டை மறித்து, 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாமகிரிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதை ஏற்காத பொதுமக்கள், சாமி சிலையை இடித்தவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி, மறியலை தொடர்ந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, ஆயுதப்படை போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து, வருவாய்த்துறை மற்றும் போலீஸ் அதிதகாரிகள் மீண்டும் சமரசம் பேசி, கோவில் சிலையை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதை ஏற்று, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News