கால்நடை மேய்ச்சலுக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்

கால்நடைகள் மேய்ச்சலுக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து, வனத்துறை அலுவலகம் முன்பு மலைவாழ் மக்கள் கால்நடைகளுடன் ஆர்ப்பாட்டம்.

Update: 2022-04-29 06:45 GMT

மலைப்பகுதியில் கால்நடை மேய்ச்சலுக்கு தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து, முள்ளுக்குறிச்சி வனத்துறை அலுவலகம் முன்பு மலைவாழ்மக்கள் கால்நடைகளுடன் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மலைப்பகுதியில் கால்நடைகள் மேய்ச்சலுக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து, வனத்துறை அலுவலம் முன்பு, மலைவாழ் மக்கள் கால்நடைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர், தங்களின் கால்நடைகளுடன் திரண்டு வந்து, கொல்லிமலை அடிவாரம் முள்ளுக்குறிச்சியில் உள்ள வனச்சரக அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மலைவாழ் மக்கள் சங்க ஒன்றிய செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். அப்போது அவர்கள், கால்நடைகளை பாதுகாக்க வேண்டும், மேய்ச்சலுக்கு தடை விதித்த ஐகோர்ட்டு உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் தமிழக அரசு ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து மலைவாழ் மக்களுக்கான மேய்ச்சல் உரிமையை பெற்று தர வலியுறுத்த வேண்டும் என்று கோஷமிட்டனர். இதில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் பெருமாள் மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News