ராசிபுரத்தில் வரும் ஏப்.1ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
ராசிபுரம் நகரில் வருகிற ஏப்.1ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.;
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, நாமக்கல் மாவட்ட தீனதயாள் உபாத்யாய ஊரகத் திறன் பயிற்சி திட்டத்தின் கீழ், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற ஏப்.1 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ராசிபுரம் முத்தாயம்மாள் கல்லூரியில் 1ம் தேதி காலை 8 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை நடைபெறும். இந்த முகாமில் படித்து வேலைவாய்ப்பற்ற இரு பாலருக்கும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தோர் பங்கேற்று தங்களுக்கு விருப்பமான நிறுவனங்களைத் தேர்வு செய்து கொள்ளலாம்.
முகாமில் பங்கேற்கும் தொழில் நிறுவனங்கள் மார்ச் 30ம் தேதி மாலை 5 மணிக்குள், தங்களது நிறுவன பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 04286-281131 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்துள்ளார்.