இராசிபுரத்தில் கொரோனா காலத்தில் சிறப்பான பணி: நர்சுகளுக்கு பாராட்டு
இராசிபுரத்தில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசு மருத்துவமனை நர்சுகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.;
இராசிபுரத்தில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசு மருத்துவமனை நர்சுகளைப் பாராட்டி ரோட்டரி சங்கம் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனை, பிள்ளாநல்லூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், ராசிபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், நாமகிரிப்பேட்டை அரசு மருத்துவமனை ஆகிய ஆஸ்பத்திரிகளில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றி, நோயாளிகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்கிய 100 நர்சுகளுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் அன்பழகன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து நர்சுகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
மண்டல உதவி கவர்னர் குணசேகர், ரோட்டரி மாவட்ட பப்ளிக் இமேஜ் சேர்மேன் பாலாஜி, செயலாளர் சுரேந்திரன், பொருளாளர் கண்ணன், அரசு ஆஸ்பத்திரி அலுவலர்கள் கலைசெல்வி, செல்வி, தயாசங்கர், செந்தில்குமார், ரமேஷ் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.