இராசிபுரம் அருகே ரயில் இன்ஜின் மோதி ஒருவர் சாவு: போலீசார் விசாரணை
இராசிபுரம் அருகே ரயில் பாதையை கடக்க முயன்றவர் இன்ஜின் மோதி உயிரிழந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.;
புதுச்சத்திரம் அருகே உள்ள களங்காணி அருந்ததியர் காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜு (85), கூலித்தொழிலாளி. இவர் சேலம்-கரூர் ரயில் பாதை வழியாகச் சென்று விட்டு, மீண்டும் ரயில் பாதையைக் கடந்து தனது வீட்டுக்குச் செல்ல முயன்றார்.
அப்போது, அவ்வழியாக சேலம் நோக்கி சென்ற ரயில் இன்ஜின் அவர் மீது மோதியது. இதில் ராஜு உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து சேலம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.