இராசிபுரம் காவல் நிலைய புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
இராசிபுரம் காவல் நிலைய புதிய இன்ஸ்பெக்டராக சுகவனம் பொறுப்பேற்றுக் கொண்டார்.;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சரவணன், கோவை மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் கோபி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்து வந்த சுகவனம் ராசிபுரம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சுகவனம், ராசிபுரத்திற்கு வந்து, போலீஸ் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.