இராசிபுரம் பகுதியில் வானத்தில் பயங்கர இடிசத்தம்: பொதுமக்கள் அதிர்ச்சி

இராசிபுரம் பகுதியில் இன்று அதிகாலையில் வானத்தில் எழுந்த பலத்த இடி சப்தத்தால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

Update: 2021-08-21 11:00 GMT

இராசிபுரம் பகுதியில் வானத்தில் பயங்கர இடிசத்தம்: பொதுமக்கள் அதிர்ச்சி

இராசிபுரம் பகுதியில் இன்று அதிகாலையில் வானத்தில் எழுந்த பலத்த இடி சப்தத்தால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று அதிகாலை நேரத்தில் பல இடங்களில் மழை பெய்தது. திருச்செங்கோடு பகுதியில் கனமழை பெய்தது. அதிகாலை 5 மணியளவில் இராசிபுரம் பகுதியில் வானத்தில் மழை மேகங்கள் சூழ்ந்திருந்தன. அப்போது மழை பெய்யவில்லை. இந்த நிலையில்வானத்தில் திடீரென பயங்கர இடி சத்தம் கேட்டது. இதனால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தி பொதுமக்கள் பலர் அதிர்ச்சியால் எழுந்து வெளியே ஓடி வந்தனர். பலர் வீதிகளில் வந்து வானகத்தை நோக்கிப் பார்த்தனர். ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல இடங்களில் சுமார் 20 வினாடிகள் வரை இந்த பயங்கர இடி சத்தம் கேட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டு பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

Tags:    

Similar News