இராசிபுரம் அருகே லாரி மோதி டூ வீலரில் சென்ற சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு

இராசிபுரம் அருகே லாரி மோதிய விபத்தில், டூ வீலரில் சென்ற சகோதரர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.;

Update: 2021-08-29 04:15 GMT

பைல் படம்

இராசிபுரம் அருகேயுள்ள தெற்குப்பட்டி, சந்திரசேகரபுரம் கிராமத்தைசச் சேர்ந்தவகள் ராமசாமி (38), ரங்கநாதன் (34), சகோதரர்கள். இருவரும் பெயின்ட் அடிக்கும் தொழிலாளர்கள்.

சம்பவத்தன்று நாமக்கல்லில் உள்ள கார் கம்பெனி ஒன்றில் பெயிண்டிங் வேலைக்காக, இருவரும் ஒரே டூ வீலரில் நாமக்கல் நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.

சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில், அணைப்பாளையம் அருகே அவர்கள் சென்றபோது, கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் இருந்து பூச்சி மருந்து லோடு ஏற்றிச்சென்ற லாரி ஒன்று டூ வீலர் மீது மோதியது.

டூ வீலர் ரோடு ஓரம் இருந்து பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் சகோதரர்கள் ராமசாமி, ரங்கநாதன் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News