கெடமலை கிராமத்திற்கு சாலை வசதி கோரி கலெக்டரிடம் மனு
கெடமலையில் சாலை வசதி செய்து தரக்கோரி மலைவாழ் மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.;
மலைவாழ் மக்கள் சங்க தலைவர் குப்புசாமி மற்றும் கெடமலை கிராம மக்கள் சார்பாக நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுக்கா வெண்ணந்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழூர் ஊராட்சியில் கெடமலை கிராமங்களில் சுமார் 500 மலைவாழ் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
இங்கு வசிக்கும் மக்களுக்கு சாலை வசதி இல்லாத காரத்தினால் கர்ப்பிணிகள் மற்றும் பொது மக்களுக்கு நோய்வாய்பட்டால், சுமார் 12 கி.மீ தூரம் அவர்களை டோலி கட்டி கட்டிதூக்கிக் கொண்டு போய் மருத்துவம் பார்க்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இதனால் பலர் பாதி வழியில் இறந்து விடுகிறார்கள். பழங்குடியினர் மக்களுக்கு இந்திய அரசியல் அமைப்பின் படி மருத்துவம், சாலை, கல்வி வசதிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமென்று உத்தரவு உள்ளது.
ஆனால் சாலை வசதி இல்லாத காரணத்தில் இவர்களின் வாழ்வாதாரம் பின்தங்கி உள்ளது, அதனால் ஜம்பூத்து மலைக்கு தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
ஜம்பூத்து மலை கிராமத்திலிருந்து கெடமலை கிராமத்திற்கு சுமார் 1 கி.மீ தொலைவில் வன துறைக்கு சொந்தமான நிலத்தில் மக்கள் காலம் காலமாக நடந்துச் செல்லும் பாதை கரடு, முரடாக உள்ளது. அந்த பாதை வழியாக சாலை அமைத்து கொடுத்தால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
சாலை வசதி இல்லாத காரணத்தினால் மலைப்பாதையில் நடந்து செல்லும்போது விஷ பூச்சிகள் கடித்து பலர் பாதிக்கபட்டுள்ளனர். இங்கு மின்சார விநியோகத்திற்கு தேவையான பொருட்களை எடுத்துச் செல்ல முடியாமல் ஜம்பூத்து மலை உள்ளது. அ
தனால் பல மாதங்களாக மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே உடனடியாக சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.