இராசிபுரத்தில் சித்த மருத்துவ முகாம்: எம்.பி ராஜேஷ்குமார் துவக்கம்

இராசிபுரத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், சித்த மருத்துவ முகாமை ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார்.

Update: 2022-05-29 10:30 GMT

இராசிபுரத்தில் நடைபெற்ற சித்து மருத்துவ முகாமை ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார்.

ஆண்டகலூர் கேட், காசி விநாயகர் கோயில் வளாகத்தில் சித்த மருத்துவ மையத்தின் சார்பில், சித்த மருத்துவ சிகிச்சை முகாம் மற்றும் அரியவகை மூலிகை செடிகள் கண்காட்சி நடைபெற்றது. நாமக்கல் எம்.பி சின்ராஜ் முன்னிலை வகித்தார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி முகாமை துவக்கி வைத்து, கண்காட்சியைப் பார்வையிட்டார். தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் சார்பாக யோகக் கலை நிகழ்ச்சி மற்றும் சித்த மருத்துவ கல்லூரி மாணவ,மாணவிகள் சார்பாக பொதுமக்களுக்கு இலவச மருத்துவு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்திய மருத்துவ முறை மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநர் கணேஷ், ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன், முன்னாள் எம்எல்ஏ ராமசுவாமி, முன்னாள் எம்.பி சுந்தரம், ஒன்றிய குழு உறுப்பினர் பாலசந்திரன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News