அரசு வேலை வாங்கித்தருவதாக பண மோசடி : முன்னாள் அமைச்சர் சரோஜா கோர்ட்டில் சரண்

முன்னாள் அதிமுக அமைச்சர் டாக்டர் சரோஜா மற்றும் அவரது கணவர் ஆகிய இருவரும் ராசிபுரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

Update: 2022-04-20 07:45 GMT

அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா.

இராசிபுரம்: 

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அதிமுக அமைச்சர் டாக்டர் சரோஜா மற்றும் அவரது கணவர் ஆகிய இருவரும் ராசிபுரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். பின்னர் அவர்கள் கண்டிசன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

கடந்த அதிமுக ஆட்சியில், தமிழக சத்துணவு மற்றும் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் சரோஜா மற்றும் அவரது கணவர் லோகரஞ்சன் ஆகியோர், சத்துணவு திட்டத் துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பணம் வாங்கியதாக, அவரது உறவினர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். டாக்டர் சரோஜா கைதாகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். பின்னர் கோர்ட்டில் தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக முன் ஜாமீன் பெற்றார்.

இந்த நிலையில் இன்று காலை சரோஜா மற்றும் அவரது கணவர் லோகரஞ்சன் ஆகியோர், இராசிபுரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜரானார்கள். பின்னர் ஜாமீன் கேட்டு கோர்ட்டில் அவரது வக்கீல் மனு தாக்கல் செய்தார். டாக்டர் சரோஜா மற்றும் அவரது கணவர் இருவரும் ரூ.25 லட்சம் பிணையத்தொகை செலுத்தினர். வழக்கு விசாரணை துவங்கும் வரை டாக்டர் சரோஜாவும், அவரது கணவரும், வாரம் ஒரு முறை நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கையொப்பம் இட வேண்டும் என்று அவர்களை கண்டிசன் ஜாமீனில் நீதிபதி விடுவித்தார்.

Tags:    

Similar News