ஆயில்பட்டி அருகே கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
ஆயில்பட்டி அருகே கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொல்லிமலை அரியூர் நாடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால் (32). கட்டிட தொழிலாளி. இவர் ராசிபுரம் தாலுக்கா ஆயில்பட்டி அருகே வாடகை வீட்டில் தங்கி வேலைக்குச் சென்று வருகிறார். இவருடைய மனைவி கண்ணகி. இவர்களுக்கு சச்சின் என்ற மகன் உள்ளார்.
ஜெயபாலுக்கு குடிப்பழங்கள் இருந்த வந்ததாக தெரிகிறது. இதனால் அடிக்கடி குடும்பத்தாருடன் சண்டை போட்டு வந்துள்ளார். இந்த நிலையில் விரக்தியடைந்த ஜெயபால் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தகற்கொலை செய்து கொண்டார்.
தகவலின் பேரில் பேளுக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், ஆயில்பட்டி எஸ்ஐ மனோகரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.