இராசிபுரம் அருகே உள்ளாட்சி இடைத்தேர்தல் புறக்கணிப்பு: கிராம மக்கள் அறிவிப்பு
இராசிபுரம் அருகே அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி உள்ளாட்சி இடைத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.;
பைல் படம்.
நாமக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு, 6வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வருகிற 9ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் பரபரப்பாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இத்தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ஆர்.புதுப்பாளையம் பஞ்சாயத்தின் 1, 2வது வார்டு, எம்ஜிஆர் காலனி பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.
அப்பகுதியில் சாலை அமைக்கப்படும் எனக்கூறி கற்கள் கொட்டப்பட்ட நிலையில், கடந்த ஒராண்டாக சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும், ஓடைப் புறம்போக்கு நிலத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி தேர்தலைப் புறக்கணிப்பதாக துண்டுப் பிரசுரம் அச்சிட்டு வீடுகள்தோறும் விநியோகித்து வருகின்றனர்.