நாமகிரிப்பேட்டை அருகே கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பனை செய்தவர் கைது
நாமகிரிப்பேட்டை அருகே கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
இராசிபுரம் தாலுக்கா ஒடுவன்குறிச்சி பகுதியில், மதுபாட்டில்களை பதுக்கி கள்ளத்தனமாக விற்பனை செய்வதாக நாமகிரிப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி, போலீசார் ஒடுவன்குறிச்சி பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் ஒருவர் மதுபாட்டில்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அவர் அதே பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் அழகேசன் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.