போதமலை மலைப்பாதைக்கான நில அளவீடு பணிகளை அமைச்சர் துவக்கி வைப்பு.
Bodhamalai-போதமலை மலைப்பாதைக்கான நில அளவீடு பணிகளை அமைச்சர் துவக்கி மதிவேந்தன் வைத்தார்.
Bodhamalai-நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா, வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் போதமலை உள்ளது. இந்த மலைவாழ் மக்கள் வாழும் பகுதிக்கு, இதுவரை ரோடு வசதி இல்லை. வனப்பகுதியில் ரோடு அமைக்க வேண்டியுள்ளதால், சுப்ரீம் கோர்ட்டின் பசுமை தீர்ப்பாயம் அனுமதி பெற முடியாமல் பல ஆண்டுகளாக பாதை அமைக்கப்படவில்லை. இந்த நிலையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்ததால், தற்போது போதமலைக்கு 34 கி.மீ தூரம் மலைப்பாதை அமைக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து மலைப்பாதை அமைக்கும் பணிகளுக்கு முன்னேற்பாடாக, போதமலை அடிவாரமான கீழூர் பஞ்சாயத்து, புதுப்பட்டி ஆகிய இடங்களில் மலைப்பாதை அமைக்க, நில அளவீடு பணிகள் மற்றும் எல்லைகளை குறிப்பிட்டு அடையாள கற்கள் நடும் பணி நடைபெற்றது. சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பணிகளை துவக்கி வைத்தார்.
வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் .துரைசாமி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் துரைசாமி, டவுன் பஞ்சாயத்து தலைவர் புதுப்பட்டி ஜெயக்குமார், பட்டணம் நல்லதம்பி, முன்னாள் எம்எல்ஏ ராமசாமி, கீழூர் பஞ்சாயத்து தலைவர் அலமேலுமணி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2