இராசிபுரத்தில் தறித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
இராசிபுரத்தில் தறித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
இராசிபுரம் பிள்ளார் தெருவை சேர்ந்தவர் சரவணன் (49). தறித்தொழிலாளி. இவருடைய மனைவி செல்வகுமாரி. இவர்களுக்கு ஓபுளி மனோஜ், கனிஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர். சரவணனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சரவணன், மனைவியின் நகையை அடகு வைத்து கடன் வாங்கியுள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று சரவணன் படுக்கை அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
அதை பார்த்து அதிர்ச்சியடைந்த மனைவி மற்றும் குடும்பத்தினர், அவரை மீட்டு ராசிபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் சேர்க்கப்பட்டு, மீண்டும் சேலம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரவணன் உயிரிழந்தார். இதுகுறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.