நாமகிரிப்பேட்டை அருகே கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

Dead News- நாமகிரிப்பேட்டை அருகே சேகோ பேக்டரி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .;

Update: 2022-07-29 03:00 GMT

பைல் படம்.

Dead News- ராசிபுரம் தாலுக்கா, நாமகிரிப்பேட்டை அருகே மெட்டாலாவில் தனியாருக்கு சொந்தமான சேகோ பேக்டரி உள்ளது. இந்த மில்லில் உத்தரபிரதேச மாநிலம் முசாத்பூர் பகுதியை சேர்ந்த பரோனி என்பவரின் மகன் சுக்பீர் (22) தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் பணியில் சேர்ந்தார். இந்த நிலையில், சம்பவத்தன்று சுக்பீர் பணி முடிவதற்கு முன்பாகவே தனது அறைக்குச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. அங்கு அவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆயில்பட்டி போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News