இராசிபுரம் கூட்டுறவு சொசைட்டியில் ரூ.17 லட்சம் மதிப்பிலான மஞ்சள் ஏலம்

இராசிபுரம் கூட்டுறவு சொசைட்டியில் ரூ.17 லட்சம் மதிப்பிலான மஞ்சள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.

Update: 2021-09-02 02:45 GMT

மாதிரி படம் 

இராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் (ஆர்சிஎம்எஸ்), நாமகிரிப்பேட்டை கிளையில் வாரந்தோறும் மஞ்சள் ஏலம் நடைபெறுகிறது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு நாமகிரிப்பேட்டை, ஒடுவன்குறிச்சி, புதுப்பட்டி, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, பேளுக்குறிச்சி, அரியாக்கவுண்டம்பட்டி, ஆத்தூர், ஊனத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, விவசாயிகள் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஏலத்திற்கு விரலி ரகம் மஞ்சள் 270 மூட்டைகளும், உருண்டை ரகம் 120 மூட்டைகளும், பனங்காலி ரகம் 10 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டடன. சேலம், ஈரோடு, நாமகிரிப்பேட்டை, ஒடுவன்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டு மஞ்சள் கொள்முதல் செய்தனர்.

இதில் விரலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 45 முதல் அதிகப்பட்சமாக ரூ.8 ஆயிரத்து 573-க்கும், உருண்டை ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.5 ஆயிரத்து 902 முதல் அதிகபட்சமாக ரூ.6 ஆயிரத்து 903-க்கும், பனங்காலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.13 ஆயிரத்து 402 முதல் அதிகபட்சமாக ரூ.15 ஆயிரத்து 802-க்கும் விற்பனையானது. மொத்தம் 400 மூட்டை மஞ்சள் ரூ.17 லட்சம் மதிப்பில் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.

Tags:    

Similar News