இராசிபுரம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து அரசு அலுவலர் உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து அரசு அலுவலர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2021-09-22 11:15 GMT

பைல் படம்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள முஸ்டக்குறிச்சி, மேற்குத் தெருவைச் சேர்ந்தவர் காந்திதேவன் மகன் சக்திவேல் (35), இவர் கமுதி வருவாய் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.

அவர் அலுவலக வேலையாக சென்னை செல்வதற்காக, இன்று அதிகாலை மதுரையில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார்.

அந்த ரயில் கரூர்-சேலம் அகல ரயில்பாதையில், இராசிபுரம் அருகே அத்தனூர் மேம்பாலத்தில் ரயில் சென்றுகொண்டிருந்தபோது, கதவு ஓரமாக நின்றுகொண்டிருந்த சக்திவேல் தவறி ரயிலில் இருந்து கீழே விழுந்தார். உடலில் பலத்த காயம் பட்டதால் சக்திவேல் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகல் கிடைத்ததும் வெண்ணந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். இது குறித்து சேலம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News