சிறுமி கடத்தல் விவகாரம்: ஒருவர் கைது
நாமக்கல் அருகே, சிறுமியை கடத்திய விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள திருமலை பட்டியை சேர்ந்த 17 வயது நிரம்பிய பிளஸ்டூ மாணவி கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென வீட்டில் இருந்து மாயமானார்.
இது குறித்து, மாணவியின் பெற்றோர் புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்தனர். வழக்கு பதிவு செய்த புதுச்சத்திரம் போலீசார் காணாமல் போன சிறுமி குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், மேலப்பட்டி சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவருடன் மாணவியிடம் பழகி வந்ததுடன், திருமண செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து கல்லூரி மாணவனை புதுச்சத்திரம் போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் சிறுமியை மீட்டு காப்பகத்துக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.