குடும்ப பிரச்சினையால் விரக்தி: பெண் தூக்கிட்டு தற்கொலை
மங்களபுரம் அருகே குடும்ப பிரச்சினையால் விரக்தியடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
நாமகிரிப்பேட்டை ஊராட்சி, ஒன்றியம் மங்களபுரம் அருகே உள்ள மூலக்காடு கிராமத்தை சேர்ந்தவர் அஜித்குமார் (22). கூலித்தொழிலாளி. இவருக்கும் வாழப்பாடி அருகே உள்ள மன்னார்பாளையத்தை சேர்ந்த கிருத்திகா (20) என்பவருக்கும், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் அஜித்குமார் சரியாக வேலைக்குச் செல்லாமல் அடிக்கடி மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த கிருத்திகா வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து சென்ற மங்களபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிருத்திகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான 4 ஆண்டுகளில் இளம்பெண் இறந்துள்ளதால் இதுகுறித்து நாமக்கல் ஆர்டிஓ மஞ்சுளா விசாரணை நடத்தி வருகிறார்.