நாமக்கல்: ஓய்வூதியம் பெறும் 1,17,257 பேருக்கு இலவச வேட்டி, சேலை

நாமக்கல் மாவட்டத்தில் மாதாந்திர ஓய்வூதியம் பெறும் 1,17,257 பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டுள்ளதாக எம்.பி ராஜேஷ்குமார் தெரிவித்தார்.

Update: 2021-11-05 10:00 GMT

இராசிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  ஒய்வூதியம் பெறுவோருக்கு இலவச வேஷ்டி, சேலைகளை ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார் வழங்கினார். அருகில் முன்னாள் எம்.பி சுந்தரம்.

இராசிபுரம் தாசில்தார் அலுவலகத்தில், சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் மாதாந்திர ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு, விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாதாந்திர ஓய்வூயம் பெறும் பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி, சேலைகளை வழங்கினார். அப்போது  பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் முதியோர் உதவித்தொகை பெறும் 64,059 பயனாளிகளுக்கும், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறும் 16,066 பயனாளிகளுக்கும், இலங்கை அகதிகளில் முதியோர் உதவித்தொகை பெறும் 220 பயனாளிகளுக்கும் வேட்டி அல்லது சேலை வழங்கப்பட்டுள்ளது. விதவை உதவித்தொகை பெறும் 36,551 பெண்களுக்கும், திருமணமாகாதோர் உதவித்தொகை பெறும் 361 பெண்களுக்கும் சேலை வழங்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் நாமக்கல் தாலுக்காவில் 13,020 பயனாளிகளுக்கும், இராசிபுரம் தாலுக்காவில் 23,087 பயனாளிகளுக்கும், திருச்செங்கோடு தாலுக்காவில் 23,213 பயனாளிகளுக்கும், பரமத்திவேலூர் தாலுக்காவில் 6,949 பயனாளிகளுக்கும், கொல்லிமலை தாலுக்காவில் 918 பயனாளிகளுக்கும், சேந்தமங்கலம் தாலுக்காவில் 13,722 பயனாளிகளுக்கும், குமாரபாளையம் தாலுக்காவில் 30,848 பயனாளிகளுக்கும், மோகனூர் தாலுக்காவில் 5,500 பயனாளிகளுக்கும் என,  மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,17,257 பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி அல்லது சேலை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், இராசிபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன், முன்னாள் எம்.பி சுந்தரம், முன்னாள் எம்எல்ஏ ராமசாமி, அரசு வக்கீல் செல்வம், திமுக பிரமுகர்கள் ஜெயக்குமார், பொன் நல்லதம்பி, சங்கர், தாசில்தார் கார்த்திக்கேயன், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் தமிழ்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News