இராசிபுரம் திரும்பிய ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமாருக்கு உற்சாக வரவேற்பு
ராஜ்சயசபா எம்.பியாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு, இராசிபுரம் திரும்பிய ராஜேஷ்குமாருக்கு, திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.;
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக உள்ள ராஜேஷ்குமாரை, திமுக சார்பில் ராஜ்யசபா எம்.பி வேட்பாளராக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். எதிர்த்து யாரும் போட்டியிடததாதல் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
எம்.பியாக அறிவிக்கப்பட்டதும், திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கட்சித்தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப்பெற்ற ராஜேஷ்குமார், சென்னையில் இருந்து இராசிபுரம் திரும்பினார். அவருக்கு இராசிபுரம் எல்லையில் நகர திமுக சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் பரிவட்டம் கட்டப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.
நகர திமுக செயலாளர் சங்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எம்.பி ராஜேஷ்குமார், பஸ் நிலையம் அருகில் உள்ள ஜி.பி.சோமசுந்தரம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திரளான திமுக நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.