மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த எலக்ட்ரீசியன் பலி
வெண்ணந்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த எலக்ட்ரீசியன் உயிரிழந்தார்.;
இராசிபுரம் தாலுக்கா,வெண்ணந்தூர் அடுத்த அத்தனூர் தாசன்புதூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (40). எலக்ட்ரீசியன். இவர் சம்பவத்தன்று மாலை தனது மோட்டார்சைக்கிளில், மல்லூர் சென்று விட்டு மீண்டும் அத்தனூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது வெண்ணந்தூர், மூலக்காடு என்ற பகுதியில் வந்தபோது திடீரென்று மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கண்ணன் தலையில் பலத்த காயம்பட்டு உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வெண்ணந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.