இராசிபுரம் அருகே அடிப்படை வசதி கோரி தேர்தல் புறக்கணிப்பு: வீடுகளில் கருப்புக்கொடி
இராசிபுரம் அருகே அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு செய்து வருகின்றனர்.;
பைல் படம்.
இராசிபுரம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி உள்ளாட்சி இடைத்தேர்தலைப் புறிக்கனிப்பதாக அறிவித்துள்ள கிராம மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டியுள்ளனர்.
நாமக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு வார்டு எண்.6 உறுப்பினர் பதவிக்கு வருகிற 9ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வெண்ணந்தூர் ஒன்றியம் பிச்சாம்பாளையம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் வசதி, சாலை வசதி, சுகாதார வசதி மற்றும் மயான வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிக்ளை செய்து தரக்கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் பயனில்லை.
எனவே வருகிற 9ம் தேதி நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலைப் புறக்கனிக்கப் போவதாக அறிவித்து அங்குள்ள அவர்களின் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி தங்களின் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.