இராசிபுரம் அருகே ஏழை மாணவியின் உயர் கல்விக்கு திமுக சார்பில் நிதிஉதவி
இராசிபுரம் அருகே ஏழை மாணவியின் உயர் கல்விக்கான உதவித்தொகையை ராஜ்சயபா எம்.பி. ராஜேஷ்குமார் வழங்கினார்.;
இராசிபுரம் ஒன்றியம் காக்காவேரியை சேர்ந்த இளஞ்சியா என்ற மாணவிக்கு, கேரள கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியியல் பல்கலையில் பட்ட மேற்படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அவரின் குடும்ப சூழ்நிலை காரணமாக கல்லூரியில் கட்டணம் செலுத்தி சேர்க்கை பெற மிகவும் சிரமப்பட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த, கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், ராஜ்யசபா எம்.பியுமான ராஜேஷ்குமார், மாவட்ட திமுக சார்பில் ரூ.25,000 நிதி உதவி வழங்க ஏற்பாடு செய்தார். இதையொட்டி ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன் மாணவி இளஞ்சியாவை நேரில் சந்தித்து கல்வி உதவித்தொகையை வழங்கினார். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் வனிதா செங்கோட்டையன் கலந்து கொண்டார்.