இராசிபுரம் அருகே குடும்ப பிரச்சினையால் ஜோதிடர் தூக்கிட்டு தற்கொலை

இராசிபுரம் அருகே குடும்ப பிரச்னை காரணமாக ஜோதிடர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-09-14 06:00 GMT

பைல் படம்.

நாமக்கல், கொண்டிசெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கேசவன் (55), ஜோதிடம் பார்க்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு கவுரி (49) என்ற மனைவியும், திருமணமான ரம்யா, நதியா என்ற இரு மகள்கள் உள்ளனர். கணவன் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 6 இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், ஜோதிடர் கேசவன் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தாக கூறப்படுகிறது. தீவிர மன உளைச்சலில் இருந்த கேசவன் சம்பவத்தன்று புதுசத்திரம் அருகேயுள்ள அய்யம்புதூர் பகுதியில், சுந்தரம் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் இருந்த வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் கிடைத்ததும், புதுசத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு உடலைக் கைப்பற்றி, இராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதணைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News