வெண்ணந்தூரில் திமுக தேர்தல் அலுவலகம்: எம்.பி ராஜேஷ்குமார் திறப்பு

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் திமுக தேர்தல் அலுவலகத்தை, ராஜ்சபா எம்.பி ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்;

Update: 2021-09-30 12:30 GMT

வெண்ணந்தூரில், திமுக தேர்தல் அலுவலகத்தை ராஜ்சபா எம்.பி ராஜேஷ்குமார் திறந்து வைத்தார். அருகில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், வேட்பாளர் துரைசாமி ஆகியோர்.

நாமக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு, 6 வது வார்டுக்கு, உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில், திமுக சார்பில் துரைசாமி வேட்பாளராக போட்டியிடுகிறார். இதையொட்டி வெண்ணந்தூர் ஒன்றியம், ஆர்.புதுப்பாளையம் பகுதியில், திமுக தேர்தல் பணிமனை அமைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் தலைமையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ராஜ்யசபா எம்.பியும், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான ராஜேஷ்குமார், தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார். நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.

முன்னாள் எம்எல்ஏ ராமசாமி, வெண்ணந்தூர் ஒன்றிய பொறுப்பாளர் துரைசாமி, சேந்தமங்கலம் ஒன்றிய செயலாளர் அசோக்குமார், பட்டணம் நகர செயலாளர் நல்லதம்பி, நாமகிரிபேட்டை நகர செயலாளர் செயலாளர் அன்பழகன், ஒன்றியக்குழு உறுப்பினர் நாராயணசாமி உள்ளிட்ட பலர்,  நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News