அரசு தொடக்கப்பள்ளி குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடல்

ஆசிரியர்கள் எடுக்கும் பாடங்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் வருகை பதிவு குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்

Update: 2022-08-23 09:00 GMT

வெண்ணந்தூர் அரசு தொடக்கப்பள்ளி குழந்தைகளுடன் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் கலந்துரையாடினார்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுக்கா, வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு செய்த ஆட்சியர்  ஸ்ரேயா சிங் பள்ளிக்குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை ஆட்சியர் ஸ்ரேயா சிங் திடீர் ஆய்வு செய்தார். அப்போது பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை, ஆசிரியர்கள் எடுக்கும் பாடங்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் வருகை பதிவு குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களில் கல்வித்தரத்தை பரிசோதித்தார். அதனைத் தொடர்ந்து சத்துணவு திட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும் சத்துணவு மையத்தில் உணவுப் பொருட்கள் இருப்பு குறித்து கேட்டறிந்தார்.

Tags:    

Similar News