ராசிபுரம் கூட்டுறவு சொசைட்டியில் ரூ.1.23 கோடி மதிப்பில் பருத்தி ஏலம்
ராசிபுரம் கூட்டுறவு சொசைட்டியில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.1.23 கோடி மதிப்பிலான பருத்தி விற்பனை நடைபெற்றது.
ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் (ஆர்சிஎம்எஸஅ) கிளையில் பருத்தி இலம் நடைபெற்றது. ராசிபுரம், பேளுக்குறிச்சி, நாமகிரிப்போட்டை, குருசாமிபாளையம், முத்துக்காளிப்பட்டி, மசக்காளிபட்டி, கவுண்டம்பாளையம், சந்திரசேகரபுரம், அணைப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 3,640 மூட்டை பருத்தியை விற்பனைக் கொண்டு வந்திரந்தனர். கொங்கணாபுரம், திருச்செங்கோடு, ஈரோடு, அவிநாசி, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் நேரடி ஏலத்தில் கலந்துகொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர்.
ஏலத்தில் ஆர்.சி.எச் ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.8,888 முதல் அதிக பட்சம் ரூ.10,069-க்கும், சுரபி ரக பருத்தி குறைந்தபட்சம் ரூ.8,900 முதல் அதிகபட்சம் ரூ.9,799-க்கும், கொட்டு ரக பருத்தி குறைந்தபட்சம் ரூ.4,583 முதல் அதிகபட்சம் ரூ.6,700 வரை ஏலம் போனது. மொத்தம் 3 ஆயிரத்து 640 மூட்டை பருத்தி ரூ.1 கோடியே 23 லட்சத்துக்கு விற்பனையானது.