நகராட்சி பள்ளி வகுப்பறை கட்டும் பணியை தொடங்கி வைத்த அமைச்சர்
இராசிபுரத்தில் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் நகராட்சி பள்ளி வகுப்பறை கட்டும் பணியை, அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.;
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் நகராட்சி அலுவலகம் அருகில் அமைந்துள்ள, பாரதிதாசன் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் 3 கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டும் பணிகளுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதையொட்டி வகுப்பறை கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு, ராஜேஷ்குமார் எம்.பி. தலைமை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 3 கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுமான பணியினை துவக்கி வைத்தார். முன்னாள் எம்.பி. சுந்தரம், நகராட்சி கமிஷனர் (பொ) கிருபாகரன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.