ராசிபுரத்தில் டூவீலர் மீது கார் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு
Today Accident News in Tamil -ராசிபுரத்தில் டூவீலர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.;
பைல் படம்.
Today Accident News in Tamil - நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி (60). விவசாயி. இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் பட்டணத்திலிருந்து ராசிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். ராசிபுரத்தில் சேலம் ரோட்டில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே சென்றபோது, எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் விவசாயி குப்புசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக ராசிபுரம்அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் அவர் பரிõதபமாக உயிரிழந்தார். இது குறித்து, ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2