வட மாநிலங்களில் பாஜக வெற்றி: நாமக்கல் மாவட்ட பாஜகவினர் கொண்டாட்டம்

வட மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, நாமக்கல் மாவட்ட பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Update: 2022-03-10 11:45 GMT

வட மாநிலங்களில் பாஜக வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, இராசிபுரத்தில், மாவட்ட பாஜக தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.

உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதை முன்னிட்டு, நாமக்கல் மாவட்ட பாஜக சார்பில், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டன.

ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட பாஜக தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். பாஜகவினர் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்கள், பஸ் பயணிகள் உள்ளிட்டோருக்கு இனிப்புகள் வழங்கியும், வெற்றியைக் கொண்டாடினர்.

பொதுச்செயலாளர் சேதுராமன், ராசிபுரம் நகர பொறுப்பாளர் வேலு, மாவட்ட பாஜக நிர்வாகிகள் வக்கீல் குமார், லோகேந்திரன், சித்ரா, ஹரிஹரன், ராம்குமார், குமார் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், திருச்செங்கோடு, மங்களபுரம், முள்ளுக்குறிச்சி, பரமத்தி-வேலூர் உள்ளிட்ட பகுதிகளிலும், மாவட்ட பாஜக சார்பில், தேர்தல் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Tags:    

Similar News