நாமகிரிப்பேட்டை அருகே குழந்தை திடீர் உயிரிழப்பு: போலீசார் விசாரணை

நாமகிரிப்பேட்டை அருகே குழந்தை திடீர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.;

Update: 2022-04-21 00:45 GMT

பைல் படம்.

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அக்கலாம்பட்டியை சேர்ந்தவர் கோபி. பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பிரியா. இவர்களுக்கு மூன்றரை வயதில் முகுல் என்ற குழந்தை உள்ளது. சம்பவத்தன்று கோபியும், மனைவி பிரியாவும் வேலைக்கு சென்றனர். அப்போது தங்கள் குழந்தையில், அதே பகுதியில் வசிக்கும் கோபியின் பெற்றோர் சாமிக்கண்ணு- சுகுணா வீட்டில் குழந்தை முகுலை விட்டு சென்றனர். அவர்கள் குழந்தையை வீட்டுக்குள் தொட்டிலில் போட்டு ஆட்டிக் கொண்டிருந்தனர்.

அப்போது குழந்தை திடீரென்று மயக்கமடைந்தது. அவர்கள் குழந்தையை, நாமகிரிப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது: குறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தினர். முதற்கட்ட விசாரணையில் குழந்தையின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த ருத்திராட்சக் கொட்டை, குழந்தையின் கழுத்தை இறுக்கியதால் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிகிறது. பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் குழந்தை எப்படி இறந்தது என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News