கோனேரிப்பட்டி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆவணி திருவிழா கோலாகலம்

Amman Kovil - கோனேரிப்பட்டி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற, கிடா வெட்டு பூஜையில் ஆண்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

Update: 2022-08-19 03:15 GMT

ராசிபுரம், கோனேரிப்பட்டி ஸ்ரீ காமாட்சி அம்மனுக்கு, ஆவணி திருவிழாவை முன்னிட்டு, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

Amman Kovil -ராசிபுரம் நகரில், கோனேரிப்பட்டி பகுதியில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவிழா சிறப்பான முறையில் நடைபெறும்.இந்த ஆண்டு திருவிழா, நேற்று முன்தினம் சக்தி அழைப்புடன் தொடங்கியது.

பெண்கள் பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். இதையடுத்து சுமங்கலிகளுக்கு மாங்கல்ய கயிறு மற்றும் மஞ்சள் வழங்கப்பட்டது. நேற்று காலையில் கோவிலில் இருந்து நந்தவனத்திற்கு சக்தி அழைத்தல் நடந்தது. மதியம் மகா பூஜையுடன் அம்மனுக்கு கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

இதில் ராசிபுரம் மற்றும் கோனேரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்தை சேர்ந்த ஆண்கள், சிறுவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். 15-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு சாமிக்கு படைக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற கிடா விருந்தில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இன்று மறுபூஜை விழா நடைபெறுகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News