ஆனி அமாவாசையை முன்னிட்டு வெண்ணந்தூர் 5 முனியப்ப சாமிக்கு சிறப்பு பூஜை
ஆனி அமாவாசையை முன்னிட்டு ராசிபுரம் வெண்ணந்தூர் 5 முனியப்ப சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூரில் பிரசித்திபெற்ற 5 முனியப்பன் கோயில் உள்ளது. ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு இந்த கோயிலில் காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் சுவாமிக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் தீபாராதணை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதனாம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.