பரமத்திவேலூர்: காவிரி ஆற்றில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி பலி

பரமத்தி வேலூர் அருகே காவிரி ஆற்றில் குளித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.;

Update: 2021-07-20 03:00 GMT

பரமத்தி வேலூர் அருகில் உள்ள எஸ்.வாழவந்தி, காளிபாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ், விவசாயி. இவரது மகன், ஜெகதீசன் (26). அவர், எம்எஸ்சி கேட்டரிங் படித்து முடித்து, பெங்களூரில் உள்ள ஒரு ஓட்டலில் பணியாற்றி வந்தார். கொரோனா பரவல் காரணமாக, ஓட்டல் மூடப்பட்டுள்ளதால், ஊர் திரும்பிய ஜெகதீசன் தங்கள் தோட்டத்தில் விவசாய பணியில் ஈடுபட்டு வந்தார்.

சம்பவத்தன்று மாதியம் 2 மணிக்கு ஜெகதீசன் தனது நண்பர்களுடன் பாலப்பட்டி, களிமேடு அருகே காவிரி ஆற்றுக்கு குளிக்கச் சென்றார். அப்போது, ஆற்றின் ஆழமான பகுதிக்குச் சென்று குளிக்கும்போது அவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உதவியுடன் ஜெகதீசனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவரை மீட்கும்பணி தோல்வியில் முடிந்தது. ஜெகதீசன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

மீனவர்களின் உதவியுடன் இரண்டு நாட்களாக அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் அவரது உடல், சடலமாக கீழ்பாலப்பட்டி அருகே காவிரி ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது. இது குறித்து மோகனூர் பேலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News