பரமத்திவேலூரில் உலக நுகர்வோர் தினவிழா: மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள்

பரமத்திவேலூரில் தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் புலனாய்வு கமிட்டி சார்பில் உலக நுகர்வோர் தின விழா நடைபெற்றது.;

Update: 2022-03-26 09:00 GMT

பரமத்திவேலூர் கந்தசா கண்டர்கல்லூரியில் நடைபெற்ற உலக நுகர்வோர் தின விழாவில், போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் புலனாய்வு கமிட்டி, நாமக்கல் மாவட்ட கிளை சார்பில், பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரி என்எஸ்எஸ் திட்டம் மற்றும் குடிமக்கள் நுகர்வோர் மன்றம், இணைந்து உலக நுகர்வோர் தின விழா நடைபெற்றது.

தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் புலனாய்வு கமிட்டி தலைவர் வக்கீல் செல்வம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். கந்தசாமி கண்டர் கல்லூரி முதல்வர் தங்கராஜ், நுகர்வோர் புலனாய்வு கமிட்டி மாவட்ட செயலாளர் டால்பின் பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்லூரி என்எஸ்எஸ் திட்ட அலுவலர் மாதவன் வரவேற்றார். மாவட்ட நுகர்வோர் கோர்ட் உறுப்பினர் முத்துக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்தரங்கை துவக்கி வைத்தார். பரமத்திவேலூர் சிவில் சப்ளைஸ் தாசில்தார் விஜயகாந்த் நிகழ்ச்சியில் கல்நதுகொண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

தொழிலாளர் துறை துணை ஆய்வாளர் மயில்வாகனன், நுகர்வோர் புலனாய்வு கமிட்டி மாநில செயலாளர் ஆறுமுகம், இணை செயலாளர் குணசேகரன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். முடிவில் மாநில பொதுச் செயலாளர் இக்பால் நன்றி கூறினார்.

Tags:    

Similar News