மனைவி பிரிந்த விரக்தியில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியடைந்த கூலித் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள புத்தூர் ரோடு, சின்னத்தம்பி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவருடைய மகன் சக்திவேல் (28), கூலித்தொழிலாளி. இவருக்கும், மீனா என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை.
இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மீனா தனது கணவருடன் கோபித்துக்கொண்டு தூத்துக்குடியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக வசித்து வந்த சக்திவேல் விரக்தியடைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டு கூரையில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.