வேலகவுண்டம்பட்டி அருகே சரக்கு ஆட்டோ மோதி பெண் சாவு: போலீசார் விசாரணை

வேலகவுண்டம்பட்டி அருகே சரக்கு ஆட்டோ மோதியதாதல் டூ வீலரில் சென்ற பெண் உயிரிழந்தார்.;

Update: 2021-09-30 02:30 GMT

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள சுங்கக்காரம்பட்டி, வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (65). விவசாயி. இவர் சம்பவத்தன்று தனது மகள் தங்கம்மாளை (45), தனது டூ வீலரில் அழைத்துக் கொண்டு வேலகவுண்டம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

வேலகவுண்டம்பட்டி அருகே சென்றபோது எதிரே வந்த சரக்கு ஆட்டோ டூ வீலர் மீது மோதியது. இந்த விபத்தில் மொபட்டின் பின்னால் அமர்ந்து சென்ற தங்கம்மாள் தலையில் பலத்த காயம்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த துரைசாமியை அங்கிருந்தவர்கள் மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது குறித்து வேகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு ஆட்டே டிவைர் மணிகண்டன் (19) என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News