ஜேடர்பாளையம் அருகே டூ வீலரில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
Road Accident News Today -ஜேடர்பாளையம் அருகே டூ வீ லரில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.;
Road Accident News Today -மோகனூர் தாலுக்கா மணப்பள்ளி அருகே உள்ள தீர்த்தாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம் (50), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ராதாமணி (47). கணவன், மனைவி இருவரும் கடந்த 11-ந் தேதி சோழசிராமணி அருகே தேவம்பாளையத்தில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக வீலரில் சென்று கொண்டிருந்தனர். டூ வீலரை சதாசிவம் ஓட்டினார். ராதாமணி பின்னால் உட்கார்ந்து சென்றார். கபிலர்மலையில் இருந்து ஜேடர்பாளையம் செல்லும் ரோட்டில் ஜேடர்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்றபோது குறுக்கே ஓடி வந்த நாய் ஒன்று டூ வீலர் மீது விழுந்தது.
இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த கணவன், மனைவி இருவருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட, ராதாமணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காயம் அடைந்த சதாசிவம் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த விபத்து குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2