ஜேடர்பாளையம் அருகே பஸ் சக்கரம் ஏறி வயர்மேன் பலி: மகன் காயம்

ஜேடர்பாளையம் அருகே பஸ் சக்கரம் ஏறியதால் வயர்மேன் உயிரிழந்தார். அவரது மகன் படுகாயம் அடைந்தார்.

Update: 2021-11-07 06:45 GMT

பைல் படம்.

பரமத்திவேலூர் தாலுக்கா, ஜேடர்பாளையம் அருகே உள்ள வடகரையாத்தூர் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (43). இவர் மின்வாரியத்தில் வயர்மேனாக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று கனகராஜ், அவரது மகன் சுஜன் (19) ஆகியோர் மோட்டார் சைக்களில் சென்று கொண்டிருந்தனர். சுஜன் டூ வீலரை ஓட்டினார். அவரது தந்தை பின்னால் அமர்ந்து சென்றார். ஆனங்கூர் அருகே சென்றபோது, குறுக்கே எருமை மாடு ஒன்று வந்தது. அப்போது, பிரேக் போட்டபோது டூ வீலர் கீழே கவிழ்ந்து, இருவரும் ரோட்டில் விழுந்தனர். அச்சமயம், ஜேடர்பாளையத்தில் இருந்து பரமத்திவேலூர் நோக்கி வந்த அரசு டவுன் பஸ்சின் முன் சக்கரம், ரோட்டில் விழுந்து கிடந்த கனகராஜின் கை மீது ஏறியது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தந்தை, மகனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஈரோட்டில் இருந்து மேல்சிகிச்சைக்காக கனகராஜ் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கனகராஜ் உயிரிழந்தார். சுஜனுக்கு ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News