வடகரையாத்தூர் பொன் காளியம்மன் கோயில் கும்பாபிசேக விழா
Vadakarayathur Pon Kaliamman Temple Kumbabiseka Festival;
வடகரையாத்தூர் ஸ்ரீ பொன்காளியம்மன் கோயில் கும்பாபிசேகம் விழா விமரிசையாக நடைபெற்றது. பரமத்திவேலூர் தாலுக்கா, ஜேடர்பாளையம் அருகே வடகரையாத்தூரில் ஸ்ரீ பொன் காளியம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளது. இதையொட்டி மகா கும்பாபிசேக விழா கடந்த 10-ந் தேதி விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது. பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர்.
11-ந் தேதி புதிய விக்ரகங்களுக்கு கண் திறப்பும், யாக பூஜையும் நடைபெற்றது. அடுத்த நாள் விநாயகர் வழிபாடு, புன்யாகம், பஞ்சகவ்யம், 6-ம் கால யாகபூஜை பூர்ணாஹூதியுடன் நிறைவு பெற்றது. தொடர்ந்து யாக சாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு, பொன் காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுர கலசத்திற்கு, சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிசேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து மூலவர் தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாராதணை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.